ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ சாதனை!

Published On:

| By Jegadeesh

people can travel for 5 rupees in metro

ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் அதிக பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஜூலை 27 ஆம் தேதி 1,97,307 பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி இன்று (ஆகஸ்டு 1) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
1.1.22 முதல் 30.04. 2022 வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.


1.5.22 முதல் 31.05. 2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 1.6.22 முதல் 30.06. 2022 வரை மொத்தம் 52,90,390 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
1.7.22 முதல் 31.07.22 வரை மொத்தம் 53,17,659 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஜூலை 27 ஆம் தேதி 1,97,307 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மேலும், ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் மட்டும் க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 16,11,440 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32,81,792 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டணத்தள்ளுபடி வழங்கப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மீன்வள அமைச்சரின் தொகுதியிலேயே மீனவர்களுக்கு இந்த நிலையா? எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel