தமிழகத்தில் நாளை (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் பேசிய அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் மக்கள் எதிர்ப்புகள் உள்ள கடைகளை கணக்கெடுக்கும்படி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, நாளை முதல் (ஜூன் 22) 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 138 கடைகளும், மதுரை மண்டலத்தில் 125 கடைகளும் அடைக்கப்படுகின்றன.
மேலும் , திருச்சி மண்டலத்தில் 100 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐசிசி ரேங்கிங்: களத்தில் இறங்காமல் கெத்து காட்டும் இந்திய வீரர்கள்
“பி.டி.ஆர் மனசு வைத்தால் ஸ்டாலின் குடும்பமே ஜெயிலுக்கு போவது உறுதி”-செல்லூர் கே.ராஜு