மதுரை தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இருந்து கட்டு கட்டாக எரிந்த நிலையில் 500, 200 ரூபாய் நோட்டுகள் இன்று (ஆகஸ்ட் 27) மீட்கப்பட்டுள்ளன.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டி நேற்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 9 பயணிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரயில் பெட்டி தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு வட்ட ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வி.எம்.சவுத்ரி ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “மதுரை ரெயில் தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்று கூறினார்.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில் பெட்டிக்குள் இருந்து எரிந்த நிலையில் கட்டு கட்டாக 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டன.
உலக கோப்பை 2023: மேத்யூ ஹைடன் விரும்பும் இந்திய அணி வீரர்கள்!
RED SANDAL WOOD படம்: சொல்ல வருவது என்ன?