காஞ்சிபுரம்: ஜவுளி பூங்காக்கள் அமைக்க மானியம்!

தமிழகம்

ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவிகிதம் மானியம் அளிக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில்முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

“மேற்படி திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உடனடியாக செயலாக்கம் செய்ய ஏதுவாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை-2019இன்படி குறைந்தபட்சம் மூன்று தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் பொருட்டு திருத்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நடிகர்களுக்கு தடை: அதிரடியில் இறங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்!

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜி தம்பி டெல்லிக்கு விட்ட தூது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *