தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் உட்பட 5 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (நவம்பர் 27) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு டிஜிபியாக பணியாற்றி வந்த ராஜீவ் குமார் ஐபிஎஸ், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் டிபன்ஸ் டிஜிபியாக பணியாற்றி வந்த வன்னிய பெருமாள் ஐபிஎஸ், ரயில்வே காவல்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜியாக பணியாற்றி வந்த மல்லிகா ஐபிஎஸ், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே காவல்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த அபிஷேக் தீக்ஷித், பதவி உயர்வுடன் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பியாக பணியாற்றி வந்த முத்தமிழ், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”வெறும் 10 நிமிடம் தான்” : காளியம்மாள் பேச்சுக்கு சீமான் பதில்!