நளினி விடுதலை: முகாமுக்கு செல்லும் நால்வர்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 5 பேர் முறைப்படி விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று(நவம்பர் 11) தீர்ப்பு வழங்கியது.

ஆனால் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்காததால் முறைப்படி விடுவிக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று(நவம்பர் 12) வேலூர், மதுரை, புழல் சிறைகளுக்கு 6 பேரின் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது பரோலில் இருக்கும் நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிறை நடைமுறைகள் முடிந்ததை அடுத்து நளினி முறைப்படி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதேபோன்று நளினியைத் தொடர்ந்து முருகன், சாந்தன் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மேலும் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவர் புழல் சிறையில் இருந்தனர். அவர்களையும் சிறைத்துறை அதிகாரிகள் விடுவித்தனர்.  

முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கைத் தமிழர்கள் என்பதால், அவர்களை காவல்துறையினர் தங்களது வாகனத்தில் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு அழைத்து செல்கின்றனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சுரப்ப நாயக்கன்பட்டியில் பரோலில் இருக்கிறார்.

மதுரை மத்திய சிறைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவரையும் விடுதலை செய்வதற்கான பணியை  மத்திய சிறை அதிகாரிகள் துவக்கி  உள்ளனர்.

கலை.ரா

செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

80 நிமிடத்தில் 15.20 கோடி வருமானம் ஈட்டிய திருப்பதி தேவஸ்தானம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts