தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று (டிசம்பர் 16) உத்தரவு பிறப்பித்துள்ளது.
1994 ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர்களுக்கு, முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் அமுதா
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த்

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுதீப் ஜெயின்,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா,
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்தியாவில் இலங்கை அதிபர்… தமிழக மீனவர்களுக்காக ராகுல் கடிதம்!
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- எந்ததெந்த மாவட்டங்களுக்கு கனமழை?