மாண்டஸ் புயலால் 5 பேர் பலி!

தமிழகம்

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு கரையைக் கடந்தது. இந்த புயலின் போது 5 பேர் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து இன்று (டிசம்பர் 10) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசினார்.

அவர் பேசுகையில், “மாண்டஸ் புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 2 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்;

98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. குடிசைகள் மொத்தம் முழுவதுமாக 25ம், பகுதியாக 138ம் சேதமடைந்துள்ளன. வீடுகளைப் பொறுத்தவரைப் பகுதியாக 18ம் சேதமடைந்துள்ளன.

மீனவர்களைப் பொறுத்தவரை எந்தவித உயிரிழப்பும் இல்லை. 40 இயந்திர படகுகள், 140 வலைகள், 2 பைபர் படகுகள் முழுமையாகவும், 24 பைபர் படகுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 694 மரங்கள் விழுந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

216 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 10,843 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நாளைக்குள் இவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக மிகப்பெரிய சேதம் ஏற்படவில்லை.

பயிர் இழப்பீட்டைப் பொறுத்தவரை, மழைநீர் வடிந்த பின்னர் ஆய்வு மேற்கொண்டு வேண்டிய நிவாரணங்கள் வழங்கப்படும். மீனவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்” என்றார்.
பிரியா

சந்திரமுகி 2 : ஜோதிகா இடத்தில் யார்?

இமாச்சலின் அடுத்த முதல்வர் யார்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *