ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் 5 ஆம் தேதி விஜயதசமி என்பதால் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதி வார இறுதி நாட்கள் என்பதால் 2 நாட்கள் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் ஆயுத பூஜை விடுமுறை நாட்களுக்கு இடையில் 3 ஆம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாள் வருகிறது.
இதனால் அண்ணா பல்கலைக்கழகம் அதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்குத் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு நாளை (நவம்பர் 1) முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தொடர் விடுமுறை அளிக்கப்படுவதால் கல்வி பயில்வதற்காக வெளி ஊர்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
மோனிஷா
அக்டோபரில் தொடர்ச்சியாக விளையாட்டு போட்டுகள்!
பொறுப்பில் இருக்கும்போதே தேர்தலுக்கு அவசரம் ஏன்?: எடப்பாடிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!