நாளை முதல் சென்னையில் மலர்க் கண்காட்சி!

Published On:

| By Kavi

சென்னையில் நான்காவது ஆண்டாக நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜனவரி 2) தொடக்கி வைக்கிறார்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. சென்னை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு தோட்டக் கலைத்துறை சாா்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி தொடா்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டும் நடைபெறுகிறது.  

இதையொட்டி, சென்னை மலர்க்காட்சிக்குத் தேவையான செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நாளை சென்னையில் நடைபெறும் மலர்க் கண்காட்சிக்கு 30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன் மலர்கள் சென்னை வந்து சேர்ந்துள்ளன.

நாளை (ஜனவரி 2) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கும் 2025-ம் ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி ஜனவரி 18-ம் தேதி வரை  நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ. 75-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின் வாகனங்கள் பதிவு அதிகரிப்பு: என்ன காரணம்?

பியூட்டி டிப்ஸ்: பாடி வாஷினை முகத்துக்கும் உபயோகிக்கலாமா?

ஹெல்த் டிப்ஸ்: நீரிழிவாளர்கள் இதையெல்லாம் சாப்பிடலாம்… தப்பில்லை!

கிச்சன் கீர்த்தனா: குஞ்சாலாடு! 

டாப் 10 செய்திகள்: புத்தாண்டு கொண்டாட்டம் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் வரை!

பாலியல் வன்கொடுமைகளின் வேர்கள் வெகு தொலைவில் இருக்கின்றன!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share