சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி எப்போது?

Published On:

| By christopher

சென்னை தீவுத்திடலில் நாளை (ஜனவரி 12) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொருட்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, சென்னை தீவுத்திடலில் நாளை (ஜனவரி 12)  மாலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

12, 13-ம் தேதிகளில் பொதுமக்கள் கட்டணமின்றி பொருட்காட்சியை பார்வையிடலாம். 14-ம் தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ.40, சிறியோருக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு குறைவானோர் பொருட்காட்சியை பார்க்க கட்டணம் இல்லை என்றும்  சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஜனவரி 13ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கிழங்கான் மீன் வறுவல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share