சென்னை மலர் கண்காட்சிக்கு குன்னூரில் தயாராகும் 45,000 நாற்றுகள்!

சென்னை மலர் கண்காட்சிக்கு குன்னூரில் தயாராகும் 45,000 நாற்றுகள்!

தமிழகம்

சென்னையில் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்கு குன்னூர் காட்டேரி பூங்காவில் 15,000 தொட்டிகளில் 45,000 மலர் நாற்றுக்கள் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பாக ஆண்டுதோறும் கலைஞர் நூற்றாண்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மலர்க் கண்காட்சிக்கு உதகை, கொடைக்கானல், ஓசூர் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மலர் நாற்றுக்கள் தொட்டிகளில் தயார் செய்யப்பட்டு இங்கிருந்து லாரி மூலமாக சென்னைக்கு எடுத்துச் சென்று காட்சிப்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டும் சென்னை மலர் கண்காட்சிக்கு லட்சக்கணக்கான மலர் தொட்டிகள் கொண்டு செல்லப்பட உள்ளது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காட்டேரி பூங்காவில், 15,000 தொட்டிகளில் சால்வியா டெல்பினியம் உட்பட பல்வேறு வகைகளில் 45,000 மலர் நாற்றுக்கள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று சிம்ஸ் பூங்கா, உதகை ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தோட்டக் கலை பண்ணை உட்பட பல்வேறு இடங்களிலும் லட்சக்கணக்கான மலர் நாற்றுக்கள் தொட்டிகளில் தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சிக்கான தேதிகளை அரசு அறிவித்த பின்பு இங்கிருந்து இந்த மலர் தொட்டிகள் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : அதிமுக ‘கள ஆய்வுக்குழு’ கூட்டம் முதல் டெல்லி கணேஷ் உடல் தகனம் வரை!

பிராமணர்களையும் அரவணைத்ததே திராவிடம் !

கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் பேல்

மழைக்கால பரிதாபங்கள்… அப்டேட் குமாரு

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *