ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு!
தமிழத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று (ஜனவரி 1 )உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மதுரை, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலிக்கு போலீஸ் கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்த உத்தரவில் 45 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 5 ஐ.ஜி.,க்கள் – ஏ.டி.ஜி.பி.,க்கள் ஆகவும், 5 டி.ஐ.ஜி.,க்கள்- ஐ.ஜி., ஆகவும், 16 எஸ்.பி.,க்கள்- டி.ஐ.ஜி., ஆகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
பிரவின் குமார் அபிநபு – ஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நரேந்திரன் நாயர்- ஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்திய பிரியா- ஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கார்த்திகேயன்- மத்திய மண்டல ஐஜி ஆகவும்
விஜயகுமார்- டிஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துரை – டிஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ராமநாதபுர சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபிநவ் குமார்- டிஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பகலவன் – டிஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயச்சந்திரன் – டிஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தஞ்சாவூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜேஸ்வரி – சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜேந்திரன் – திருநெல்வேலி போலீஸ் கமிஷனரகவும், ஷியாமளா தேவி – பெரம்பலூர் எஸ்பியாகவும்,
மோகன் ராஜ்- கள்ளக்குறிச்சி எஸ்பியாகவும், ஸ்ரீநிவாசபெருமாள் – விருதுநகர் எஸ்பியாகவும் சாய் பிரனீத் – மதுரை தெற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர்த்து மத்திய அரசு பணியில் உள்ள தமிழக கேடரை சேர்ந்த 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் புத்தாண்டு பரிசு!
ரசிகர்களுக்கு ரஜினி புத்தாண்டு வாழ்த்து!