தமிழகத்தில் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் 4000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிடங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் தபால் மற்றும் நேரடியாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாய விலை கடைகளில் விற்பனையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரண்டாம் வகுப்பு (பிளஸ் 2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி கடைசித் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கொரோனா தொற்றுக்குப் பின்னர் இந்த தேர்வு நடைபெறுவதால் இந்த ஆண்டு இத்தேர்விற்கு ஏராளமானவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
இதனால், தேர்வு நாட்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மோனிஷா
’பொருத்திறுந்து பாருங்கள்’ : பண்ரூட்டி ராமசந்திரனை சந்தித்த பின் பன்னீர்
ரவுடி மீது துப்பாக்கிச் சூடு: தாம்பரம் காவல் ஆணையர் விளக்கம்!
Good