இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி : 4 பெண்கள் பரிதாப பலி

Published On:

| By christopher

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று சார்பில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 4) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். அப்போது வேட்டி, சேலைக்கான டோக்கன் பெற பெண்கள் மொத்தமாக முண்டியடித்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயக்கமடைந்த நிலையில், 4 பெண்கள் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை அப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக வட்டாட்சியர் சம்பத் மற்றும் திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னை கண் சொட்டு மருந்து : அமெரிக்காவில் ஒருவர் பலி… 5 பேர் பார்வையிழப்பு!

இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: வாணி ஜெயராம் மறைவிற்கு முதல்வர் இரங்கல்!