திருச்சியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் காந்திநகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மாரிமுத்து. இவர் தனது தாய் சாந்தி (60), மனைவி விஜயலட்சுமி (45), மகள்கள் பிரதீபா (12), ஹரிணி (10) ஆகியோருடன் வசித்து வருகிறார். மாரிமுத்து உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று (டிசம்பர் 31) சென்னைக்கு சென்றுள்ளார்.
மாரிமுத்துவின் தாய், மனைவி, மகள்கள் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த 4 பேரும் ஈடுபாடுகளில் சிக்கினர்.
விடியற்காலையில் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் மாரிமுத்துவின் தாய், மனைவி, மகள்கள் என பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு தினமான இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
புத்தாண்டு தினத்தில் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்திய வார்னர்
சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி58 : புத்தாண்டில் இஸ்ரோ சாதனை!