4 தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Published On:

| By christopher

4 IPS officers promoted as SP in tamilnadu

தமிழ்நாடு காவல்துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நேற்று (ஜூலை 29) உத்தரவு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஏ.எஸ்.பி ரவிச்சந்திரன் திருச்சி மாநகர எஸ்.பி மற்றும் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி ரமேஷ் பாபுவுக்கு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் ஏ.எஸ்.பி மலைசாமி தற்போது சொத்து உரிமை அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சேலம் சைபர் கிரைம் ஏ.எஸ்.பி செல்லபாண்டியன் ஆவடி சிறப்பு காவல் படை எஸ்.பி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ரோகித்… கோலி இல்லாத இந்தியா… அசால்டாக அட்டாக் செய்த வெஸ்ட் இண்டீஸ்

உரிமை தொகை: பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment