தொடர்ந்து பெய்யும் மழை… மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published On:

| By christopher

சென்னையை தொடர்ந்து கனமழை காரணமாக மேலும் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது மீண்டும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

மேலும், இதன் காரணமாக, வரும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ‘மிக கனமழை’ பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் இன்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று மாலை முதல் யாரும் எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதற்கிடையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 30) காலை 8:30 மணி வரை ‘மிக கனமழை’ பெய்யும் என சென்னை வானிலை மையம் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இப்படியான சூழ்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

அதை தொடர்ந்து, தற்போது காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மழையால் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள 23,000 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மகிழ்

எச்சரிக்கை: சென்னையில் 5 முக்கிய சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர்!

கனமழை எதிரொலி: சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share