மாணவர்களுக்கு வழங்க 4 கோடி பாடப் புத்தகங்கள் தயார் !

Published On:

| By Kavi

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க 4 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக  கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக அச்சடிக்கப்பட்ட விலையில்லா பாடநூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று தமிழ்நாடு காகித நிறுவனம் மூலம் நோட்டுப் புத்தகங்களும் முழுமையாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அதிகாரிகள்,

“தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2 கோடியே 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும்.

பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான பாட நூல்களையும்,

8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான முழுமையான பாட நூல்களையும் வழங்க தயார் நிலையில் இருக்குமாறும்,

மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடி ஜி கோவில்: அப்டேட் குமாரு

தோனி ஓய்வா? CSK-வின் காசி விஸ்வநாதன் சொன்ன புதிய தகவல்!

Gold Rate: இவ்வளவு குறைஞ்சிடுச்சா தங்கம் விலை?

புனே: கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு பனிஷ்மென்ட் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share