தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று (பிப்ரவரி 9) உத்தரவிட்டுள்ளார். ias officers transfer tamilnadu
அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனராக கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார், தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளராக ஷஜிவனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளராக மங்கத் சர்மா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி, உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி,
கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக சுப்பையன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த், தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக பிரஜேந்திர நவ்நீத், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளராக செந்தில் குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாஹூ, பொதுத்துறை சிறப்பு செயலாளராக ச்ஜ்ஜன்சிங் ரா.சாவன்,
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளராக மணிவாசன், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக சந்திரமோகன், மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக கோ.பிரகாஷ், பொதுப்பணித்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கைத்தறித்துறை இயக்குனராக மகேஸ்வரி ரவிக்குமார், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையராக அண்ணாதுரை, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக வினீத், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக சுரேஷ் குமார்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனராக கிரண் குராலா, தமிழ்நாடு மின்விசை உற்பத்தி மேலாண்மை இயக்குனராக ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ias officers transfer tamilnadu