சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவரிடமிருந்து ரூ. 37 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்க நியூ ஜல்பைகுரியிலிருந்து விரைவு ரயில் இன்று (ஆகஸ்ட் 28) மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரயிலில் பயணித்த மராட்டியத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்தரா தன்னுடன் ரூ. 37 லட்சம் பணத்தை எடுத்து வந்துள்ளார்.
அவரிடம் இருந்த பணத்தை ரயில்வே காவல் அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்தனர். அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் சங்கர் ஆனந்தராவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹவாலா பணம் என்பது வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் சட்டத்திற்கு புறம்பான வழியில் தாய்நாட்டிற்கு எடுத்துக் கொண்டு வருவதாகும்.
மோனிஷா
நாளை முதல் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகள்!