36 more IAS officers transferred in Tamil Nadu!

தமிழ்நாட்டில் மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

தமிழகம்

ஏற்கெனவே 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 36  ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 15) உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இன்று இடமாற்றம் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி மோகன், உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆணையர் ஜெயகாந்தன் ஜவுளித்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம், வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்து அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு பிரிவு இயக்குநர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, மதுவிலக்கு பிரிவு இயக்குநராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலன் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி ஆட்சியர் ஸ்ரீதர், இந்து அறநிலையத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழந்தைகள் நலன் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவின் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநராக பொற்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராக மோகன சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மேலாண் இயக்குநராக கஜலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை ஆணையராக ஜடக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை  ஆணையராக ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இ-கவர்னன்ஸ் திட்ட இயக்குனராக கோவிந்தராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனராக சரண்யா ஹரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு கூடுதல் பதிவாளராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிலச்சீர்திருத்த இயக்குனராக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில் துறை கூடுதல் ஆணையராக சிவசவுந்திரவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அறநிலையத்துறை இணை ஆணையராக சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எய்ட்ஸ் சங்க திட்ட இயக்குனராக சீதாலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்குனராக அமிர்தஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கால்நடைத்துறை இயக்குனராக மகேஷ்வரி  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப கல்வி ஆணையராக ஆப்ரகாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டில்லி கூடுதல் இருப்பிட ஆணையராக ஆஷிஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிட்கோ தலைவராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாடநுால் கழக தலைவராக பி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காதி வாரிய செயல் திட்ட இயக்குநராக பி.மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சாலை திட்ட இயக்குனராக ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிமென்ட் கழக தலைவர் அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எல்காட் தலைவர் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எல்காட் செயல் இயக்குனராக தீபனா விஸ்வேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோஆப்டெக்ஸ் தலைவர் தீபக் ஜேக்கப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர ஆணைய செயல் திட்ட இயக்குநராக கற்பகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடல்சார் வாரிய செயல் திட்ட இயக்குநராக வள்ளலார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜாபர் சாதிக்கிற்கு 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!

நீட் ஆள்மாறாட்ட வழக்கு : ஒன்றிய அரசின் மீது நீதிபதி அதிருப்தி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *