தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தைப் புதுப்பிக்க 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் என்றும் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிம கட்டணத்தை செலுத்தி படிவம் 2-ஐ சமர்ப்பித்து உரிமத்தை புதுப்பித்து இணையவழி முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாமதமாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படும். நவம்பர் 30ஆம் தேதி வரை 10 சதவிகிதமும், டிசம்பர் 31ஆம் தேதி வரை 20 சதவிகிதமும், அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 30 சதவிகிதமும் தாமத உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
வரிசை கட்டும் பண்டிகைகள்: அதிகரிக்கும் விமானக் கட்டணங்கள்!