இந்தியாவில் தற்போது டோல்கேட் கட்டணமாக மாதம் ரூ.340, ஆண்டுக்கு ரூ.4,080 செலுத்தி கார் உரிமையாளர்கள் ஃபாஸ்டாக் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். 60 கி.மீக்கு ஒரு டோல் கேட் இந்தியாவில் உள்ளது.
இந்த நிலையில், ஆண்டுக்கு 3 ஆயிரமாக குறைத்து ஆண்டு முழுவதும் பயணிக்க மத்திய அரசு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, எத்தனை முறை வேண்டுமானாலும் டோல் கேட்டை கடந்து செல்லலாம்.
15 ஆண்டுகளுக்கு 30 ஆயிரம் மொத்தமாக கட்டியும் ஆயுளுக்கும் டோல்கேட் பாஸ் எடுத்து கொள்ளலாம். இது தற்போதுள்ள ஃபாஸ்ட்ராக்குடன் இணைக்கப்பட்டு விடும்.
இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத மோதல் ஏற்படாது. காலதாமதமும் ஏற்படாது. மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் புதிய வசதி அமலுக்கு வந்து விடும்.
கார் ஓட்டுநர்களுக்கு அமைதியை ஏற்படுத்தி டென்ஷனையும் குறைக்கும் வகையில் இந்த வசதியை அமல்படுத்த மத்திய அரசு முன் வந்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய திட்டம் கார் ஓட்டிகளின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.