சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 ஆயிரம் கோடி: ஐடி ரெய்டில் அதிரடி!

Published On:

| By Monisha

சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.3,000 கோடி கணக்கு காட்டவில்லை என்ற அதிர்ச்சி உண்மை வெளியாகியுள்ளது.

நில மதிப்பீட்டை குறைத்துக்காட்டி பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக புகார் எழுந்த நிலையில் சென்னை செங்குன்றம், திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று (ஜூலை 4) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 20 மணி நேரமாக நடைபெற்ற சோதனை இன்று நிறைவடைந்தது.

இந்த சோதனையின் போது 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2000 கோடி ரூபாய் வரை கணக்கு காட்டாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

அதேபோல் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 கோடி ரூபாய் கணக்குக் காட்டாமல் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோனிஷா

ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் நாளை தீர்ப்பு!