பைக்கில் அழைத்து சென்று 3 இளைஞர்களை கொலை செய்த ரவுடிகள்!

Published On:

| By vanangamudi

3 youngsters killed in puducherry

புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்குத்தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் நள்ளிரவு 1 மணியளவில் 3 இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 youngsters killed in puducherry

பொதுவாக புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு, வீச்சறிவாள் போன்றவற்றுக்கு எந்த பஞ்சமும் கிடையாது. கஞ்சா, சரக்கிற்கோ அல்லது 1000 ரூபாய் கூலிக்கோ கூட அங்கே கொலை நடக்கும். இதனால் புதுச்சேரி ரவுடிகளுக்கு பெயர் பெற்றது.

சமீபத்தில் முதுநிலை எஸ்.பி கலைவாணன் ரவுடிகள் லிஸ்ட் எடுத்து ஒரே இரவில் கைது செய்தார். அப்போதே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு என்.ஆர். காங்கிரஸினரும், பாஜகவினரும் மென்மையான முறையில் கண்டித்து ரவுடிகளை ஒடுக்கும் வேகத்தை குறைத்தனர்.

இதுதொடர்பாக விசாரித்தபோது, பெரும்பாலான ரவுடிகள் ஒவ்வொரு அரசியல்வாதிகள் நிழலில் தான் இருப்பதாக சொல்கின்றனர் புதுச்சேரி போலீசார்.

இந்த நிலையில் தான் நேற்று நள்ளிரவில் உழவர் கரை முன்னாள் தாதா தெஸ்தான் மகன் ரிஷி, ஜேஜேநகர் ஆதி, திடீர் நகர் தேவா ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 youngsters killed in puducherry

இந்த கொலையை பற்றி, பெரியக்கடை காவல்நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தோம்.

ரவுடி விக்கி அனுப்பிய ஆட்களா? 3 youngsters killed in puducherry

“டிவி நகரைச் சேர்ந்த தகடு சத்யா என்ற ரவுடிக்கும், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்கி ரவுடிக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இதில் தகடு சத்யாவின் வலதுகரமாக இருந்த முகிலன் என்ற ரவுடியை, விக்கியின் டீம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வைத்து கொலை செய்தனர். அதனைத்தொடர்ந்து அரியாங்குப்பம் வீக்கி டீம் சத்யாவை போட்டுத்தள்ளவும், சத்யா டீம் விக்கியை போட்டுத்தள்ளவும் திட்டம் போட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு புதுச்சேரி கடற்கரையோரத்தில் சத்யாவின் ஆதரவாளர்கள் நேற்றிரவு உல்லாசமாக இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஆதி, ரிஷி, தேவா மூவரும் யதார்த்தமாக பீச் லைனில் உலவிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட சத்யாவின் ஆட்கள், அவர்கள் மூவரையும் அழைத்து, எதற்காக இந்த பக்கம் வந்தீர்கள்? எங்களை கண்காணிக்க வந்தீர்களா? நீங்கள் விக்கி அனுப்பி வைத்த ஆட்களா? என்று விசாரித்தனர்.

அப்போது எங்களை யாரும் இங்கே அனுப்பி வைக்கவில்லை. சத்யா அண்ணாவை எங்களுக்கு நல்லாவே தெரியும்? வேண்டுமென்றால் அவரிடமே கேளுங்கள்” என்று பதில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் சத்யாவின் ஆதரவாளர்கள் தங்களது பைக்கில் ஏற்றிக்கொண்டு இரவு 11 மணியளவில் ரெயின்போ நகரில் சத்யாவுக்கு சொந்தமான பழைய பாழடைந்த வீட்டுக்கு அழைத்து சென்றனர். அதுவரை தான் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அதனையடுத்து 1 மணியளவில் கொலை சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிலையில் அந்த 2 மணி நேரத்தில் என்ன நடந்தது? கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குற்றவாளியை கைது செய்தால் தான் தெரியும். தற்போது இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்” என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share