முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 10,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்த கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரியா
”ஆதிபுருஷ்”- திரையரங்கிற்கு வந்த குரங்கு: வைரல் வீடியோ!
கரகாட்டக்காரன் – திரையரங்குகளை நிறைத்த திருவிழா!