கார் ஏறி சாலையோரம் தூங்கிய 3 பேர் பலி!

தமிழகம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் அருகே சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையோரம் யாசகர்கள் படுத்து உறங்குவது வழக்கம்.

அதே போல நேற்று இரவும் அவர்கள் அவ்வாறு தங்களது இரவு உணவை முடித்துவிட்டு சாலையோரம் படுத்து உறங்கியுள்ளனர்.

அப்போது, மது போதையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கு படுத்திருந்த மூன்று யாசகர்கள் மீது வேகமாக ஏறி இறங்கியது. இதில், அங்கு படுத்திருந்த மூன்று யாசகர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்ப்படுத்தியதில் ஒருவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாரயணன் என்பதும் மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த் என்பதும் அவர்கள் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்ப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

தற்போது இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

குஷ்பூ போலவே…பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஸ்வாதி மாலிவால்

நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 24% அதிகரிப்பு!

டியர் ஸ்டூடண்ட்ஸ்…ஆல்தி பெஸ்ட் : கூலாக வாழ்த்து சொன்ன முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *