கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர், இன்று (ஆகஸ்ட் 27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி ஸ்ரீமதி இறந்தது தொடர்பாக ஜூலை மாதம் 17ஆம் தேதி கலவரம் நடந்தது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படத்தைக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த கலவரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 27) மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழன், பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த முரளி ஆகியோரை சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
கள்ளக்குறிச்சி கலவரம் : சிறப்பு புலனாய்வு குழுவின் அடுத்தகட்ட டார்கெட் யார்?