ஆடிப்பெருக்கு நாளில் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆடி 18 ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி ஆறு பாயும் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி கொந்தளம் மதுரை வீரன் கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக ஊர் மக்கள் சென்றுள்ளனர். அவர்களுடன் ஜெகதீஸ் (18), சவுத்ரி (14), குப்புராஜ் (17) ஆகிய மூன்று பேரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதில் 3 பேருமே நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கினர். உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் ஒரு சிறுவனின் உடல் மட்டும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். அந்த இரண்டு பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொந்தளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு நாளன்று தீர்த்தம் எடுக்க சென்ற 2 சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
“எடப்பாடியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை” – செல்லூர் ராஜூ
“நவம்பரில் கூட்டணி குறித்து முடிவு” டிடிவி தினகரன்