நாளை தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையினால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப் படி திருநெல்வேலி மாவட்டம் நாலுமுத்து, காக்காச்சியில் அதிகபட்சமாக 12 செ.மீ மழைப் பதிவானது, குறைந்த பட்சமாகச் செங்கல்பட்டு, ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 1 செ.மீ மழைப் பதிவானது.
சென்னையை பொறுத்த வரை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு மிதமான மழைப் பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் ” 16-11-2024: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17-11-2024: மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
16-11-2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால், மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தனுஷுடன் நடித்த நடிகைகளும் நயன்தாராவிற்கு ஆதரவு!