கெட்டுப்போன உணவு: 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

தமிழகம்

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள விவேகானந்த சேவாலயம் நடத்தி வரும் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் திருப்பூர் சாலையில் விவேகானந்த சேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவாலயத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 6) காலை சேவாலயத்தில் உள்ள சிறுவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. அந்த உணவை உண்ட சிறிது நேரத்திற்கு பிறகு சிறுவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.

இதில் 10 முதல் 13 வயது வரை உள்ள மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள 5 சிறுவர்கள் சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த சிறுவர்களில் ஒரு சிறுவனின் உடல் மட்டும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறுவர்களின் உடல் சேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சேவாலயத்தின் வெளியில் சூழ்ந்தனர். இதனால் விவேகானந்த சேவாலயத்தின் உள்ளே வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து சேவாலய நிர்வாகத்திடம் வேலம்பாளையம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மோனிஷா

அடிதடிக்காகவே ஒரு திருவிழா: சிறுவன் பரிதாப மரணம்!

கொடூர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.