தமிழ்நாட்டில் 3.10 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (அக்டோபர் 27) தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது சத்யபிரதா சாகு, “தற்போது உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் படி தமிழ்நாட்டில் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடி, பெண் வாக்காளர்கள் 3.10 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 8,016 பேர் இருக்கிறார்கள்.
அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இறுதியாக ஜனவரி 1 2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டிருந்தோம். அந்த பட்டியல் படி 6.20 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். தற்போது இறந்தவர்களின் பெயர் நீக்கம் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்தல் ஆகிய நடவடிக்கைகளுக்குப் பிறகு 6.11 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஆளுநரை மாத்திடாதீங்க : ஸ்டாலின் பேச்சு!
’ஜப்பான்’ எப்படிப்பட்ட படம்?: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதில்!