மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி: தொடங்கிவைத்த ஸ்டாலின்

Published On:

| By Prakash

மெட்ரோ ரயில் சேவைக்காக சென்னையில் மாதவரம் -சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 13) தொடங்கிவைத்தார்.

சென்னையில் இரண்டாம்கட்டமாக 3 வழித்தடங்களில் ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் சேவைக்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 3வது வழித்தடமான மாதவரம் -சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம் தோண்டும் பணி தொடக்க விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாதவரம் -சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் சுரங்கம் தோண்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவரம் பால்பண்ணையில் இருந்து புரசைவாக்கம் நோக்கி சுரங்கம் தோண்டி கொண்டு வரப்பட இருக்கிறது.

metro rail works in chennai cm mkstalin launch

இதற்குத் தேவையான 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே மாதவரம் கொண்டு வரப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டது.

மாதவரம் – சிப்காட் வரை 47 கி.மீ. நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்க ரயில் நிலையங்கள் உள்பட 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் வர உள்ளன.

சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

வரும் 2026ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

இப்படி பேசியதால் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் : பி.சி.ஸ்ரீராம்

வளைகாப்பு அமைச்சர் என்பது பெருமை: பிடிஆர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel