2nd person body rescued in velacherry

வேளச்சேரி பள்ளம்: 2வது நபரின் உடல் மீட்பு… இருவர் கைது!

தமிழகம்

வேளச்சேரி பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய 2வது நபரின் சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 2nd person body rescued in velacherry

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. திங்கட்கிழமை அன்று பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்த போது தான் வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கின் ஒரு பகுதி 50 அடி பள்ளத்திற்குள் சென்றது.

பள்ளத்தில் சிக்கிய 5 பேரில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 2 பேரை தேடி வந்தனர். தொடர்ந்து  5 நாட்கள் மீட்புப் பணிக்கு பின் நரேஷ் என்ற பங்க் ஊழியர் இன்று (டிசம்பர் 8) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து பொறியாளர் ஜெயசீலனின் உடலை மீட்புப் படையினர் தேடி வந்தனர்.

இன்று மதியம் 2.30 மணியளவில் ஜெயசீலனின் உடலையும் மீட்பு படையினர் மீட்டனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொறியாளர் ஜெயசீலனுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று காலை விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவாகரத்தில் கட்டுமான மேற்பார்வையாளர் எழில் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை வேளச்சேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மஹூவா மொய்த்ரா எம்.பி பதவியில் இருந்து நீக்கம்!

அன்று நக்சல்… இன்று அமைச்சர்: தெலங்கானாவை கலக்கும் சீதாக்கா- யார் இந்த தன்சாரி அனுசுயா?

“எனது அரசியல் எதிர்காலம்…” : ஓபிஎஸ் கோரிக்கை – ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

2nd person body rescued in velacherry

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *