தமிழகம் முழுவதும் 35 ஜவுளிக்கடைகளில் வருமான வரித்துறை 2 ஆவது நாளாக சோதனை நடத்தி வருகிறது
கடலூர் விழுப்புரம் பாண்டிச்சேரி நெய்வேலி கரூர் திருப்பூர் ஊட்டி நாமக்கல் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் இறங்கினர்.
கேவி டெக்ஸ், சிவா டெக்ஸ், கன்னிகா பரமேஸ்வரி, மகாலட்சுமி குரூப், மேக்னா குரூப், ஆகிய டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் தமிழ்நாடு முழுவதும் வருமான வரி சோதனை தொடங்கியது.
கடலூர் கே.வி டெக்ஸ் ஜவுளிக் கடையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேவி டெக்ஸ் ஜவுளிக்கடை கடலூர் மட்டுமின்றி புதுச்சேரியிலும் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.
நாள்தோறும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில், இங்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சென்னையில் இருந்து 6 காரில் வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகம், வணிகவளாகத்தில் அடங்கியுள்ள மூன்று திரையரங்குகள், மகாலட்சுமி கல்வி நிறுவனம், மகாலட்சுமி ஜவுளி கடை, எம்.எல்.எஸ் மளிகை கடை, இருசக்கர வாகன ஷோரூம், நகைக்கடை, மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் 40க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஜவுளிக்கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்
திருக்கோவிலூர் MLS-குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் சூப்பர் மார்க்கெட் வணிகவளாகத்தில் இரண்டாவது நாள் வருமானவரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வருமான சோதனை நடத்தி வருகின்றனர். கோவையிலிருந்து 3 வாகனங்களில் உதகைக்கு வந்த 14-க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் மெயின் ரோட்டிலும் சிவா டெக்ஸ் ஜவுளி கடை இயங்கி வருகிறது. அங்கும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஜவுளி கடையான சிவா டெக்ஸ்டைல் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முசிறி மற்றும் துறையூர் நகரில் செயல்படும் மேக்னா சில்க்ஸ் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி சமயத்தில் ஜவுளி விற்பனை அதிக அளவில் இருந்ததால், முறையாக ரசீதுகள் போடப்பட்டுள்ளதா? என வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளியன்று அதிக அளவு விற்பனை நடத்தப்பட்டு கணக்கில் காட்டாமல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
கலை.ரா
“ஒரு சில இடங்களில் தவறுகள் நடந்துவிடுகிறது”– கே.என்.நேரு
தங்கம் விலையில் மாற்றம்: இன்றைய விலை நிலவரம்!