தி.மு.க. ஆட்சியில் 28,102 புதிய தொழில்முனைவோர்: அமைச்சர் அன்பரசன்

Published On:

| By Monisha

28102 new entrepreneurs in DMK regime

தி.மு.க. ஆட்சியில் 28,102 புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சிட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கில் தொழில் வணிக ஆணையரகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்,

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.770 கோடி மானியத்துடன், ரூ.2,134 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 28,102 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு ஆண்டு மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும்.

அதே வேளையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர்களும், தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.

முதலீட்டு மானியம், ஊதிய பட்டியல் மானியம், பின் முனை வட்டி மானியம் போன்ற 10 வகை மானியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்,

அவற்றினை குறித்த காலத்தில் எந்த காலதாமதமும் இன்றி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

முதல்வரின் சமச்சீர் பொருளாதாரத்தினை செயல்படுத்துவதில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. அதனை செயல்படுத்தும் விதமாக எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்கள் மற்றும் கடனுதவிகளை உரிய நேரத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: முட்டைத் தொக்கு

டிஜிட்டல் திண்ணை: மோடி கோபம்… கணக்குத் தீர்க்கும் கவர்னர்? காத்திருக்கும் உதயநிதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share