கள்ளக்குறிச்சியில் நகை கடைக்குள் புகுந்து 281 சவரன் தங்கம் மற்றும் 30 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இரவில் பூட்டை உடைத்து கொள்ளை
கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி என்ற பகுதியில் லோகநாதன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது நகைக்கடையில் நேற்று இரவு கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து லோகநாதன் போலீசில் புகார் அளித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் நகைக் கடையை பார்வையிட்டு லோகநாதனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடையில் இருந்து 281 சவரன் நகை , 30 கிலோ வெள்ளி மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
நகையை பங்கு பிரித்த கொள்ளயர்கள்
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளை சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் சோளம் விளைவிக்கப்பட்டிருந்த நிலத்தில் கொள்ளையர்கள் நகைகளை பங்குபிரித்து எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. பங்கு போட்ட இடத்தில் சிதறி கிடந்த நகைகளை எடுத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் கைரேகை தடயங்களை சேகரித்து வருகின்றனர். மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மோனிஷா
கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைதான தேர்வர்கள்: பெற்றோர்கள் குமுறல்!