27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று (ஆகஸ்ட் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி காமினி நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக இருந்த சத்யபிரியா சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பாலநாக தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 27 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐஜி அஸ்ரா கார்க் சென்னைக்கு மாற்றப்படுவார் என்று மின்னம்பலத்தில் குறிஞ்சி முதல் கோட்டை வரை- உதயநிதி கையில் போலீஸ் ஹிட் லிஸ்ட்! என்ற தலைப்பில் கடந்த ஜூலை 4ஆம் தேதி வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர் வெளியீடு!
சென்னை மெட்ரோவில் ஆறு பெட்டிகள்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!