கச்சநத்தம் மூவர் கொலை: 27 பேர் குற்றவாளிகள்- தண்டனை ஆகஸ்டு 3

தமிழகம்

கச்சநத்தத்தில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கான தண்டனை விவரம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் வீடு புகுந்து சிலர் கச்சநத்தம் கிராம மக்களை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக அருகில் உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ், பிரசாந்த் உள்ளிட்ட 27 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 27 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமம் மற்றும் நீதிமன்றத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு குற்றவாளிகளாக கருதப்படுபவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் கூடினர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டர். இந்நிலையில் , இன்று ஆகஸ்ட் 1 ஆம் தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். மேலும், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.