சென்னையில் உரிமை கோரப்படாத 260 இருசக்கர வாகனங்கள் ஏலம்!

தமிழகம்

சென்னையில் உரிமை கோரப்படாத 260 இருசக்கர வாகனங்கள் 28.06.2023 அன்று ஏலம் விடப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் கஞ்சா விற்பனை உள்பட குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிக்கும் இருசக்கர வாகனங்கள், குடிபோதையில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் வாகனங்கள் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் போலீஸார் பறிமுதல் செய்கிறார்கள்.

அப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை போலீசார் அவ்வப்போது ஏலம் விடுவார்கள். அந்த வகையில், சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 260 இருசக்கர வாகனங்கள், சென்னை, புதுப்பேட்டை பெருநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாகனங்கள் 28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

பகிரங்க ஏலத்துக்கான முன்பதிவு 14.06.2023 மற்றும் 15.06.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர். 28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும்.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்

அஸ்வின் இல்லாத ஆடும் லெவன்: ரோகித் விளக்கம்!

கிச்சன் கீர்த்தனா: பனீர் பாப்பர்ஸ்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *