தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு மத்திய அரசு சிறந்த சேவைக்கான பதக்கங்களை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 காவல் அதிகாரிகளுக்கும் ஊர்காவல் படையைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கும் சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 காவல் அதிகாரிகளுக்குச் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் பதக்கம் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தன்று இவர்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு காவலர்கள், ஊர்காவல் படையினர், சிவில் தற்காப்பு மற்றும் சீர்திருத்த சேவைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கும். அதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவல் அதிகாரிகளுக்குப் பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
அந்த பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த சேவைக்கான பதக்கப் பட்டியல்:
காவல்துறை:
ஐஜி என்.கண்ணன்,
ஐஜி ஏ.ஜி. பாபு
பிரவீன் குமார் அபினபு, காவல் ஆணையர்.
காவல்துறை கண்காணிப்பாளர்கள்
டி.பி.சுரேஷ் குமார், எம்.கிங்ஷ்லின், வி.ஷியாமலா தேவி, கே. பிரபாகர், எல். பாலாஜி சரவணன், கே.ஃபெரோஸ் கான் அப்துல்லா
துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள்
ஆர்.மனோஹரன், சி.சங்கு,எல்.டில்லிபாபு
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள்
எம்.ஸ்டீபன்,கே.ராதாகிருஷ்ணன்
காவல்துறை ஆய்வாளர்கள்
பி.சந்திரமோகன், எம்.ஹரிபாபு, ஆர்.தமிழ்செல்வி, பி.சந்திரசேகர்
துணை காவல்துறை ஆய்வாளர்கள்
டி.கே. முரளி, என்.ரவிசந்திரன் , ஜி.முரளிதாரன்
ஊர்காவல் துறை:
எம்.மூர்த்தி, கம்பனி கமாண்டர்
எஸ்.கலையழகன், பிளடூன் கமாண்டர்
பிலாட்பின் அன்பைய்யா, ஏரியா கமாண்டர்
சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கப் பட்டியல்:
கே வன்னிய பெருமாள், டைரக்டர், காவல்துறை
அபின் தினேஷ் மோடக், கூடுதல் டைரக்டர் ஜெனரல்
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சடன் பிரேக் போட்ட தங்கம் விலை… நகை வாங்க நல்ல சான்ஸ்!
போர் செல்லும் வீரன்: சிவகார்த்திகேயனின் அமரன்… மிரட்டும் மேக்கிங் வீடியோ!
போர் செல்லும் வீரன்: சிவகார்த்திகேயனின் அமரன்… மிரட்டும் மேக்கிங் வீடியோ!