தங்கம் விலையில் மாற்றம்: இன்றைய விலை நிலவரம்!

தமிழகம்

சென்னையில் இன்று (நவம்பர் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ. 37,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. நேற்று (நவம்பர் 2) ஒரு சவரன் தங்கம் ரூ. 37,928க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ. 208 விலை குறைந்து ரூ. 37,720 விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 26 விலை குறைந்து ரூ. 4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 41,376-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 224 விலை குறைந்து ரூ. 41,152க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 28 விலை குறைந்து ரூ. 5,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.50 குறைந்து ரூ. 64-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 500 விலை குறைந்து ரூ. 64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

குஜராத் தேர்தல்: இன்று அறிவிப்பு!

தெலங்கானா இடைத்தேர்தல் : நள்ளிரவில் கைதான முக்கிய தலைவர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *