சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 25) சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.7,705-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.61,640க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று (நவம்பர் 25) ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அதானி விவகாரம் : மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்!