22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக மத்தியக் குழுவினர் இன்று(அக்டோபர் 15) தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.
கடந்த அக்டோபர் 11 ஆம் தேதியன்று உணவுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், ”17%-19% வரை மாநில அரசு ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழையினால், குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான நெல் கொள்முதலின்போது,
ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு 22% வரை ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கவேண்டும்” என்று எழுதியிருந்தார்.
இருப்பினும் மத்திய நுகர்பொருள் உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக 19ம் தேதி ராதாகிருஷ்ணன் டெல்லி பயணம் மேற்கொள்ளப் போவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசின் கோரிக்கையை ஏற்று அதற்கு முன்னதாகவே 22% ஈரப்பத நெல்கொள்முதல் தொடர்பாக மத்தியக்குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்கிறது.
இன்று(அக்டோபர் 15) தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்தியக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
முதலில் தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ஆய்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து திருவாரூரிலும், அதன்பிறகு பிற மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று நெல் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும் மழை நிலவரம், அறுவடை செய்ய முடியாத நிலை, எதிர்பார்க்கப்படும் கொள்முதல் அளவு உள்ளிட்ட விவரங்களை அளிக்குமாறும் அரசுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
கலை.ரா
”பீகார் வழியில் தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சீமான்
”ஹாக்ரிட் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார்”: ராபி கோல்ட்ரேன் மறைவுக்கு ஹாரிபாட்டர் இரங்கல்!