தமிழ்நாடு முழுவதும் இன்று (நவம்பர் 9) ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி, திருச்சி, கரூர், திருநெல்வேலி, கோவை, திருப்பூர், விருதுநகர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல் என பல்வேறு மாவட்ட போலீசார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரியிருந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜுவால் இன்று (நவம்பர் 9) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி நகரங்கள், மாவட்டங்களுக்கு இடையே 2,153 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜுவால் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘காவல்துறையில் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட சிறப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், நிர்வாக ரீதியாக ஏற்கெனவே கடந்த ஒரு ஆண்டுக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், புகாரில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர் இந்த பணியிட மாற்ற பட்டியலில் இருந்தால் அவர்களை ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்க வேண்டாம்.
இதுகுறித்த தகவல்களை காவல்துறை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல் துறையில் பேசு பொருளாகியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
டூவிலர் திருட்டுக்கு எஃப்.ஐ.ஆர். போடலையா? இனி அப்படி கிடையாது!
‘அம்மா’ அமைப்பின் தலைவரா? தலை தெறிக்க ஓடும் மோகன்லால்