2000 ரூபாய் கள்ளநோட்டுகள்: இரிடிய மோசடி கும்பல் கைது!

தமிழகம்

கோவையில் 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்த போலீசார், இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது அங்கு கட்டு கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

2000 rupees fake notes seized in Coimbatore

இது தொடர்பாக அந்த  வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த  காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய  மூன்று பேரை  கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய்  நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இரண்டு கோயில் கலசங்கள், லேப்டாப், 4 மொபைல் போன்களையும் பறிமுதல்  செய்தனர். இது தொடர்பாக ஜடகோபால் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இரிடியம் இருப்பதாக சொல்லி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

பிடிபட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கலை.ரா

பொன்னியின் செல்வன்: வசூல் பொங்கி வழியும் பின்னணி! 

தொடரும் காப்பக மரணங்கள்: தூத்துக்குடியில் சிறுவன் உயிரிழப்பு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *