+2 மாணவியின் உயிரை பறித்த ’துணிவு’ திரைப்படம்!

தமிழகம்

துணிவு திரைப்படத்திற்கு தன்னை அழைத்துச் செல்லாததால் பிளஸ் 2 மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – விஜயசித்ரா தம்பதியர். இவர்களுக்கு அருள் பரணிக்கா, சிவமகா என இரண்டு மகள்கள் உள்ளனர். சுரேஷ் திருப்பனந்தாள் பேரூராட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 22) ஞாயிற்றுக்கிழமை என்பதால் துணிவு திரைப்படத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

ஆனால் பிளஸ் 2 படிக்கும் இரண்டாவது மகள் சிவமகாவுக்கு தேர்வு நடந்து வருவதன் காரணமாக அவரை படத்திற்கு அழைத்து செல்லவில்லை.

பின்னர் படம் பார்த்துவிட்டு மூவரும் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளனர். ஆனால் வெகு நேரம் ஆகியும் உள்ளே இருந்த சிவமகா கதவைத் திறக்கவில்லை.

இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அறையில் சிவமகா தூக்கில் தொங்கியவாறு இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அலறி துடித்தபடி உடனே சிவமகாவை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவமகாவின் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அஜித் நடித்து சமீபத்தில் வெளியான துணிவு படத்திற்கு மாணவியை விட்டுச் சென்றதன் காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மதுபோதையில் சென்ற தன்னை தியேட்டருக்குள் அனுமதிக்காத நிலையில் துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் தூத்துக்குடியில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு எதிரொலி: சர்ச்சையில் சிக்காமல் தப்பிய கேரள ஆளுநர்

கோபி – சுதாகரின் ‘க்ரவுட் ஃபண்டிங்’ திரைப்படம் கைவிடப்பட்டதா?

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.