திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்ற மாணவன் உட்பட மேலும் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
சற்று நேரத்தில் இந்த தீ பேருந்து முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். அனைவரும் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
மோனிஷா
ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களுடன் விபத்தில் கவிழ்ந்த லாரி!