சென்னையில் கூவம் ஆற்றின் குறுக்கே 2 உயர்மட்ட பாலங்களை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராஜீவ் காந்தி சாலையில் உள்ள இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் ‘யு’ வடிவில் இரண்டு மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது,
இதுதவிர வியாசர்பாடி கணேசபுரம், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இந்தசூழலில், வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2022-23ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் 2 உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ.42.71 கோடி திட்ட மதிப்பீட்டிலும், சன்னதி முதலாவது குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி திட்ட மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.74.36 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படவுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பிரியா
பணமதிப்பழிப்பு தீர்ப்பு : மத்திய அரசுக்கு விழுந்த அடி – காங்கிரஸ்!
புகைப்பட கலைஞர் திடீர் மரணம் : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!